களுபோவில வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த வார்ட்டினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை இனங்காணப்பட்டதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20 ஆம் இலக்க வார்ட்டினை சேர்ந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையிவ் சிகிச்சை பெற்று வந்த 64 வயதான கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தார். அவர் முன்னதாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்ற தனியார் வைத்தியசாலை ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #களுபோவிலவைத்தியசாலை #கொரோனா