Home உலகம் இத்தாலியை வதைக்கும் கொரோனா – ஒரேநாளில் 812 பேர் பலி – எண்ணிக்கை 11,591 அதிகரிப்பு – ஊரடங்கு நீடிப்பு…

இத்தாலியை வதைக்கும் கொரோனா – ஒரேநாளில் 812 பேர் பலி – எண்ணிக்கை 11,591 அதிகரிப்பு – ஊரடங்கு நீடிப்பு…

by admin

இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 812 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவால் நிலைகுலைந்துள்ளது. அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் 75 ஆயிரத்து 528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 ஆயிரத்து 981 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14 ஆயிரத்து 620 பேர் குணமடைந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனாவைக் கட்டுப்படுத்த   இத்தாலி அரசாங்கம் அமல்படுத்திய ஊரடங்கு சட்டம்  எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம் நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய முதல் மேற்கத்திய நாடு இத்தாலி என்பது கவனிக்கத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More