129
இலங்கையில் இன்று (31).03.20) பிற்பகல் 3.20 மணி வரையிலான கணிப்பீட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதெவேளை, 111 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love