136
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து நாட்டில் 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், நேற்று மாத்திரம் 21 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #இலங்கை #கொரோனா
Spread the love