191
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை (1) காலை விசேட அதிரடிப்படையினர் மன்னார் நகர சபையுடன் இணைந்து கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதிகள், கிளினிக் நிலையங்கள், உள்ளக வெளிப்புறங்களில் கிருமி நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினர் நகர சபையுடன் இணைந்து கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #அதிரடிப்படையினர் #வைத்தியசாலை
Spread the love