173
லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு காலத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
லெபனானில் பணிபுரிவதற்கான எவ்வித சட்ட ஆவணங்களும் இல்லாத இலங்கையர்கள், இந்த பொது மன்னிப்பு காலத்தில் இலங்கைக்குச் செல்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த பொதுமன்னிப்பு காலத்தை கவனத்தில் எடுக்காத ஆண்களுக்கு 4 இலட்சம் லெபனான் லீராவும் பெண்களுக்கு 3 இலட்சம் லீராவும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #லெபனான் #இலங்கையர் #பொதுமன்னிப்பு
Spread the love