Home இலங்கை கொரோனாவும் இலங்கைச் சமூகமும் – கலாநிதிஅமீர் அலி,மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்குஅவுஸ்திரேலியா…

கொரோனாவும் இலங்கைச் சமூகமும் – கலாநிதிஅமீர் அலி,மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்குஅவுஸ்திரேலியா…

by admin

கொரோனா நுண்கிருமியினால் உலகப் போரொன்றேஆரம்பமாகிவிட்டதெனலாம்.அனைத்துநாடுகளுமே இப்போரில் ஈடுபட்டுள்ளன.ஒருநுண் கிருமியினால் தோற்றுவிக்கப்பட்ட இப்போர் யாரால் எவ்வாறுஎங்கேஆரம்பிக்கப்பட்டது? அதுஎவ்வாறுஉலகளாவியரீதியில் பரவியது? அதன் சீரழிவைத் தடுக்கும் ஆற்றலையும் சக்தியையும் மனிதசமுதாயம்; இழந்துவிட்டதா? என்பனபோன்றகேள்விகளுக்குகாலம்தான் பதில் சொல்லவேண்டும்.

தொற்று நோய்களைப்பற்றிய ஒருமுக்கியமான உண்மையை பேராசிரியர் பிராங்க் சுநோடன் அவரதுகொள்ளைநோய்களும் சமூகங்களும் என்ற அற்புதான ஆய்வு நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: ‘கொள்ளைநோய்கள் தொடர்பின்றிச் சடுதியாகத் தோன்றிச் சமூகங்களைத் தாக்குவனவல்ல. மாறாக,ஒவ்வொருசமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான பல ஹீனங்களை((vulnerabilities) உருவாக்கிக் கொள்கின்றன. அவற்றைஆராய்ந்தால் அச்சமூகத்தின் அமைப்பு,அதன் வாழ்க்கைத்தரம்,அதன் அரசியல் முந்துரிமைகள் (priorities) போன்றவற்றைவிளங்கிக் கொள்ளலாம்’. இந்தப் பலஹீனங்களே கொள்ளை நோய் தாக்கத்தின் அகலத்தையும் ஆழத்தையும் மட்டுமல்லாமல் அந்நோய் எவ்வளவுகாலம் நீடிக்கும் என்பதையும் தீர்மானிக்கும். இவ்வாறுஅவர் கூறும்போதுமருத்துவவிஞ்ஞானஆராய்ச்சியினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் எள்ளளவேனும் குறைத்துஎடைபோடவில்லை.

ஆகவே இலங்கையின் பல்லினச் சமூகஅமைப்பு,நாட்டுமக்களின் வாழ்க்கைத்தரவேறுபாடுகள், நாட்டின் அரசியலின் முந்துரிமைகள்,ஆதியன இக்கொரோனா நோய் தாக்கத்தின் ஆழ அகலங்களையும் அதலிருந்து எவ்வளவு கெதியில் விடுதலைபெறலாம் என்பதையும் நிர்ணயிக்கும். எடுத்துக்காட்டாக,சகல இனங்களும் ஒரேபடியில் வைத்துக் கணிக்கப்படுகின்றனவா அல்லது பாரபட்சமாகக் கணிக்கப்படுகின்றனவா என்பது முக்கியம். கொள்ளை நோய்களுக்கு நிறபேதமோ இனபேதமோ வர்க்கபேதமோ தெரியாது. அவ்வாறான நோய்களின் முன் யாவரும் சமமே. ஆனால் அந்தநோயை ஒழிக்கநினைப்பவர்கள் அவர்களின் நடவடிக்கைகளை பாரபட்சத்துடன் மேற்கொள்வார்களாயின் நிச்சயம் நோயின் ஆயுட்காலம் நீடிப்பதுநிச்சயம். அதேபோன்று அரசியல்வாதிகளும் கொள்ளைநோயைதமக்குக் கிடைத்த ஒருவரப்பிரசாதமென நினைத்துத் தமதுஅரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் அந்நோயொழிப்பு முயற்சியை நாடுவார்களாயின் அதுவும் நோயின் ஆட்சியை நீட்டும். சாதி, இன,மத, வர்க்கவேறுபாடுகளைத் தாண்டிமானிடம் என்ற ஒரேபோர்வையின்கீழ் நின்று தார்மீக மனப்பான்மையுடன் கொரோனா ஒழிப்பை நாடினால் விரைவில் சமூகம் நோயிலிருந்து விடுதலையடையும்.

இந்தப் பின்னணியில் நின்று இலங்கையின் கொரோனா ஒழிப்புநடவடிக்கைகளை நோக்குகையில் இரண்டுவிடயங்கள் கவலையளிக்கின்றன. முதலாவது, நாட்டின் ஜனாதிபதியின் சிலநடவடிக்கைகள் கொரோனாவைதனக்குக் கிடைத்த இன்னுமொரு அரியவாய்ப்பு எனக்கருதி அதன்மூலம் தனது அரசியல் பலத்தை நிலைநாட்டவும் அவரின் அரசியல் ஆயுளை நீட்டவும் முற்படுவதாகத் தெரிகின்றது. சென்றவருடம் உயிர்த்தஞாயிறன்று ஒருபயங்கரவாதக் கும்பல் நடத்திய உயிர்க்கொலைத் தாண்டவம் கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாவதற்குக் கிடைத்த முதலாவது வரப்பிரசாதம். விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த நான் இப்பயங்கரவாதிகளையும் பூண்டோடு ஒழித்துநாட்டின் பாதுகாப்பையும் இறமையையும் நிலைநாட்டுவேன் என்று முரசறை கொட்டித்தானே அவர் தேர்தலிற் குதித்தார். அதற்காக நாட்டின் இரு சிறுபான்மை இனங்களையும் எதிரிகளாகச் சித்தரித்துத்தானே பௌத்த பேராதிக்கவாதிகள் சிங்கள பௌத்தமக்களின் வாக்குகளைஅவருக்காகக் திரட்டிவெற்றியீட்டினர்.ஆனாலும் அந்தவெற்றி தனது ஆட்சியதிகாரப் பாதையின் முதற்படியேயன்றி உச்சப்படியல்ல என்பதைஅவரும் அவரின் ஆதரவாளர்களும் நன்கறிவர். இலங்கையின் தற்போதைய அரசியல் யாப்பு அதன் பத்தொன்பதாவது திருத்தத்துடன் அமுலில் இருக்கும்வரை பௌத்த பேராதிக்கம் நிலைபெறமுடியாதென்பது வெள்ளிடைமலை. ஆகவே அந்தயாப்பு ஒன்றில் கிழித்தெறியப்பட்டுப் புது யாப்புவரையப்படல் வேண்டும், அல்லது பத்தொன்பதாம் திருத்தமாவது நீக்கப்படல் வேண்டும். அதனை நாடாளுமன்றத்தில் முன்றிலிரண்டு பெரும்பான்மைஆதரவில்லாமல் நிறைவேற்றமுடியாது. எனவேதான் தனதுதமையனின் தலைமையிலான ஸ்ரீலங்காசுதந்திர பொதுஜன கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்றிலிரண்டுபெரும்பான்மையுடன் வெற்றியடைவதற்காகஜனாதிபதிஅரும்பாடுபடுகின்றார். அந்தமுயற்சியில் ஜனாதிபதிக்குக் கிடைத்த இரண்டாவதுவரப்பிரசாதமேகொரோனாகொள்ளைநோய்.

இந்தக் கொள்ளைநோயைமுதலில் ஒழிக்கவேண்டும் என்பதில் எந்தமாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மற்றநாடுகளில் நடைபெறுவதுபோல் இலங்கையிலும்; மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகஜனாதிபதியின் கட்டளையின்கீழ் ஊரடங்குச் சட்டத்தைஅமுலாக்கியமையையாரும் குறைகூறமுடியாது. நாடேஇன்றுமரணவீடுபோல் காட்சியளித்தாலும் நோயொழிப்புக்காகமக்கள் அந்தநிலையைத் தழுவியேஆகவேண்டும். ஆனால் இவ்வாறானஒருசூழலில் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு முழு அதிகாரத்தையும் ஜனாதிபதியேகையேற்றுமக்களுக்குத் தேவையானஎல்லாஉதவிகளையும் அவரேமுன்னின்றுசெய்வதும் அதற்குஆதரவாககாப்பந்துப் பிரதமரும் அவரின் மந்திரிகளும் இயங்குவதும் மக்களின் மனதில் தன்னையும் தனக்குஆதரவானதமையனின் கட்சியையும் மட்டுமேநிலைகொள்ளச் செய்யும் ஓர் அரசியல் தந்திரம் என்றுகருதுவதில் ஏதேனும் தவறுண்டா?கோத்தாபயதன்னலம் கருதாதஒருதலைவரென்றால் பாராளுமன்றத்ததைஉடனடியாகக் கூட்டவேண்டும். தற்போதுஉருவாகியிருக்கும் பாரதூரமானபொருளாதாரநெருக்கடிக்கும் மக்களின் உடல்நலநெருக்கடிக்கும் பாராளுமன்றத்தின் ஆலோசனையுடனேயேநடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். அடுத்ததேர்தல் எப்போதுநடைபெறும் என்பதையும் பாராளுமன்றமேமுடிவுசெய்யவேண்டும்.

இந்த நோய் குறைந்ததுஅடுத்த ஆறு மாதங்களுக்காவதுநீடிக்குமெனமருத்துவவல்லுனர்கள் கருதுகின்றனர். இலங்கை இதற்குவிதிவிலக்காக இருக்கமுடியாது. இந்தநீடிப்பால் ஏற்படவிருக்கும் பொருளாதாரநட்டங்களோஅனந்தம். ஏற்கனவேகடன்பழுவினால் நசுங்கும் இலங்கையின் பொருளாதாரமும்அதனால் அவதியுறும்மக்கனுளும் மீண்டும் தலைநிமிர்வதற்குப் பலவருடங்களாவதுசெல்லும். எனினும் அனைத்துமக்களும் ஒன்றுபட்டுபலதியாகங்களுக்குமத்தியிலும் அயராதுமுயற்சிசெய்தால் அந்தக்கால இடைவேளையைச் சுருக்கலாம். இங்கேதான் இலங்கையின் பல்லினச் சமூகஅமைப்பைஎவ்வாறுஆட்சியாளர்கள் பேணுகின்றனர் என்பதுஅவசியமாகின்றது. இதனாலேதான் பேராசிரியர் சுநோடன் கொள்ளைநேயைசமூகஅமைப்புடன் தொடர்புறுத்துகிறார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் இன்னுமொருசெயலையும் கண்டிக்கவேண்டியுள்ளது. நாடேகொள்ளைநோயின் பிடியிற் சிக்குண்டுதுயரத்தில் ஆழ்ந்துள்ளஒரு சூழலில் மரணதண்டனைவிதிக்கப்பட்டஒருகொலைகாரச் சிப்பாயைமன்னித்துவிடுதலைசெய்தமையைமனிதாபிமானமுள்ளஎவருமேவரவேற்கமுடியாது. ஜனாதிபதியின் கர்வமான இச்செயல் நாட்டின் நீதித்துறைச் சுதந்திரத்துக்குவிழுந்த இன்னுமோர் இடியென்பதுஒருபுறமிருக்க,அதுதமிழினத்துக்குஇழைக்கப்பட்டமேலுமோர் இழிவும் தண்டனையும் என்பதையும் மறுக்கமுடியாது. அப்பாவித் தமிழ் மக்களை,சிறுவர்களுட்பட,வெட்டிக்கொன்ற இப்பாதகனைமன்னித்துவிடுதலையாக்கிவீதியிலேநடமாடவிட்டமைஜனாதிபதியின் அரசியல் இலாபம்கருதியா?அல்லதுஅவனைக் கொண்டுவேறுசில அட்டூழியங்களைச் செய்யவேண்டியுள்ளதுஎன்பதாலா? அல்லதுதமிழினத்தையே ஜனாதிபதிதுச்சமெனமதிப்பதாலா? ஏல்லாமேஒருபுரியாதபுதிராகத் தோன்றுகிறது. தமிழினத்தின் உள்ளங்களில் ஆறிக்கொண்டிருந்தஒருபுண்ணை ஜனாதிபதிமீண்டும் கீறிவிட்டுள்ளார். நாட்டின் பல்லினஅமைதிக்கும் ஒற்றுமைக்கும் பெரும்பான்மை இனம் அடுக்கடுக்காக இழைத்துவரும் இன்னல்கள் ஏராளம். ஜனாதிபதியின் இச்செயல் அவற்றிற்குச் சிகரமாய் அமைந்துள்ளதென்றால் அதுமிகையாகாது. எனவே,எல்லா இனங்களையும் சமமாகக் கணிக்காமல் தனதுநோயொழிப்புநடவடிக்கைகளுக்குஉதவுமாறுகேட்பதுஅவர் கேட்பதைஎவ்வாறுசரிகாணலாம்?

இலங்கையின் பல்லினச் சமூகஅமைப்புபலகலாச்சாரங்களைக் கொண்டது. அந்தக் கலாச்சாரப்பன்மைஎவ்வாறுஉதாசீனப்படுத்தப்படுகின்றதுஎன்பதற்குசிறந்ததோர் உதாரணம் கொரோனாவினால் உயிரிழந்தஒரு முஸ்லிம் ஆணுடலைத் தகனம் செய்தமை. முஸ்லிம்கள் பூதவுடலைத் தகனம் செய்வதில்லை,மண்ணுக்குள் புதைப்பார்கள். ஆனால் அதற்குமுன்னர் அவ்வுடலைக் கழுவிஅதற்காகப் பிரார்த்தித்துஅதன்பின்னரேஅடக்கம் செய்வர். தற்போதுள்ளதொற்றுநோய் பாதுகாப்புச் சூழலில் அக்கிரியைகள் எல்லாவற்றையும் செய்யமுடியாமல் போனாலும் ஆழமானபுதைகுழிக்குள் பிராhத்தனையுடன் ஓரிருஉறவினரின்பார்வையில் அடக்கம் செய்வதால் சமூகம் கலாச்சாரவேறுபாடுகளுக்குமதிப்பளிக்கின்றதைஉணர்த்தும். உதாரணத்துக்குஅவுஸ்திரேலியஅரசாங்கம் மரணச் சடங்குகளில் பங்குபற்றபத்துப் பேருக்கு இடமளித்துள்ளது. கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களைதொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவராமல் நேரேமையவாடிக்குக் கொண்டுசென்றுஅங்கேபதின்மருடன் தொழுகைநடாத்திஅடக்கம் செய்யஅரசுஅனுமதித்துள்ளது. எந்தஅளவுக்குஅவுஸ்திரேலியஅரசுபலகட்டுப்பாடுகளின் மத்தியிலும் இனங்களின் மதகலாச்சாரப் பண்புகளுக்குமதிப்பளிக்கின்றதென்பதைஇவ்வுதாரணம் எடுத்தக்காட்டவில்லையா? இதனாலேதான் கொரோனாவுக்கெதிரானபோரில் அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகமும் தனதுபூரணஒத்துழைப்பைஅரசுக்குவழங்குகின்றது.இதுஅவுஸ்திரேலியாவின் பலம்,ஆனால் இலங்கையின் பலஹீனம்.

கொள்ளைநோயும் இயற்கையின் மற்றையஅனர்த்தனங்களைப்போன்றுஅவைநீடிக்கும் காலங்களில் மானிடர்களின் குணாதிசயங்களைஉடனடியாகவெளிப்படுத்திவிடும். உதாரணமாக. அப்படிப்பட்டகாலங்களில் பொருள் தட்டுப்பாடுஏற்படுவது இயல்பு. அவ்வாறுதட்டுப்டபாடானபொருள்களைவிற்பவர்களும் வாங்குபவர்களும் எவ்வாறுநடந்துகொள்கிறார்கள் என்பதிலிருந்துஅவர்களின் குணாதிசயங்களைஅறிந்துகொள்ளலாம். சுயநலனையேமுன்வைத்துச் செற்படுவோரையும் பிறர்நலனுக்காகத் தம்நலதை; தியாகம் செய்வோரையும் இச்சமயங்களிற் காணலாம். ஒருசமூகத்தில் முதலாவதுவர்க்கம் பெருகினால் கொள்ளைநோயின் ஆயுள் நீடிக்கும், இரண்டாவதுவர்க்கம் பெருகின் அதன் ஆயுள் குறையும். எந்தவர்க்கம் வளர்கின்றதென்பதைஅச்சமூகத்தின் கல்விநிலை,அதன் தலைமைத்துவம்,தத்துவம்,கலாசாரப் பண்பாடுகள்,மக்களின் வாழ்க்கைத்தரம்,அவர்களின் பழக்கவழக்கங்கள்ஆதியனநிர்ணயிக்கும்.

முடிவாக,ஒருகொள்ளைநோய் பரவுவதையும் அதன் கொடூரங்களையும் தடுப்பூசிமருந்துகளாலும் வைத்தியர்களாலும் மட்டுமேகட்டுப்படுத்தமுடியாது. அவை இன்றியமையாததேவைகள் என்பதைமறுக்கவில்லை. ஆனால்,சுநோடன் கூறுவதுபோன்றுஒருசமூகத்தின் தனிப்பட்டபலஹீனங்கள் அந்தநோயின் நுழைவையும்,பரவலையும்,தாக்கத்தையும் தடுக்கலாம்,நீட்டலாம்,கட்டுப்படுத்தலாம்,ஏன்முற்றாகஒழித்தும் விடலாம். இந்தவிடயங்களில் இலங்கைச் சமூகம் கற்கவேண்டியபாடங்கள் இன்னும் எத்தனையோஉண்டு.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More