153
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று நாடு திரும்பியவர் என்பதுடன், அவர் இரத்மலானை ,வெடிகந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த குறித்த நபரும் அவரது மனைவியும் இத்தாலி நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் இருவரும் அண்மையில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதேவேளை உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #உயிரிழந்த #இந்தியா #கொரோனா
Spread the love