பிரான்ஸில் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதோடு, மருந்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சற்றுக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 441 பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை 471பேரும், வெள்ளிக்கிழமை 588பேரும் உயிரிழந்துள்ள நிலையில் இதன் எண்ணிக்கையும் சற்றுக்குறைவடைந்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளதோடு, இவர்களில் மருத்துவமனைகளில் 771 பேரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 143 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 6 838 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர் ( 105 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்) . கடந்த 24 மணிநேரத்தில் இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176.
இதுவரை மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 532ஆக பதிவாகியுள்ளதோடு, மூதாளர் இல்லங்களில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 2 208 எனப்பதிவாகியுள்ளது.
பிரான்சில் இதுவரை வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 68 605ஆக உள்ளதோடு, இவர்களில் 15 000 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.