பேருவளை- பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பிரசவித்த குழந்தைக்கு, கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும், சிசு சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (04.04.20) காலை நாகொட வைத்தியசாலையில் இவர், சிசுவை பிரசவித்த பின்னரே, அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிசுவின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், சிசுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நாகொடை வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்ட அறுவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், குறித்த பெண்ணின் தாய், கணவன் உள்ளிட்ட 160 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.