பிரான்ஸில் மருத்துவமனைகளில் 30000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக பதிவாகியுள்ளது. பிரான்ஸின் சுகாதாரத்துறையினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாளாந்த அறிக்கையில், மூதாளர் இல்லங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 237ஆக பதிவாகியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இது 820னால் உயர்ந்துள்ளது. இதுவரை மூதாளர் இல்லங்கள் மற்றும் மருத்துமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 328ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை ஆரம்பத்தில் இருந்து இதுவரை 19337 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 24 மணிநேரத்தில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 305ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் 59 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னராக திங்கட் கிழமை 94 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை குறைவடைந்து வருவதோடு, மொத்தமாக 7 131 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.