நான் தான் உயர்ந்தவன் என்று செருக்குக் கொண்ட மனிதரெல்லாம் இன்று வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றார்கள். இயற்கை தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகின்றது. கொரோனா!!!! நீ நல்லவனா? அல்லது கெட்டவனா? என ஊகிக்க முடியவில்லை. நீ(கொரோனா) மட்டும்தான் மனிதனினுள் ஓடுவது சிவப்பு இரத்தம், வேறு வகை இல்லை என்று பாகுபாடு பார்காமல் வந்திருக்கின்றாய். மனித குலத்தின் இழிவான செயல்களில் சாதி, மதம், அடிமைத்தனம், ஒடுக்குமுறை, ஏழை, பணக்காரன் என்று அனைத்து மட்டங்களிலும் பிரிவினை ஏற்படுத்துவது வழக்கம், நீ மட்டும் பிரிவினை காட்டாது இருப்தேன்? இன்னும் சில நாட்கள் நீடிப்பாயானால் உன்னையும் இந்த சமூகம் கட்டமைக்கும் என்று, சமூக அவல நிலையை வேடிக்கையாக மாத்திரமே கூற முடியும்.
இன்று சூரியன் முக மலர்வுடன் தன் கதிரை பாரினில் பரப்புகின்றான். தொழிற்சாலைப் புகைகள், விமான ஓட்டங்களினால் கலங்கப்பட்டிருந்த ஆகாயம் தெளிவு பெற, பறவைகள் தம் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி உல்லாசமாக வானில் பயணம் செய்கின்றது. அமைதியான சூழலிலே காண்பதற்கரிய பறவையினங்கள் ஊசலாடி திரிகின்றது. கடல்கள் அமைதியாக, தம் விம்பமான ஆகாயத்தை பிரதிபலிக்கின்றது. நீர்வீழ்ச்சிகள், நதிகள், நீரோடைகளின் ஓசையினை உணர முடிகின்றது. காடுகள் தன் இருக்கையை வெளிக்கொணர்கின்றது. இயற்கையான காற்றினை சுவாசிக்க முடினின்றது. விலங்குகள் உல்லாசமாக நடமாடுகின்றன. நம் வீடுகளை விட பல மடங்கு பலமான, ரம்மியமான பறவைகளின் வீடுகளைப் பார்த்து ரசிக்க முடிகின்றது. உம்- Àக்கணாங் குருவிகளின் கூடுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை மனிதர்களால் கூட சிந்தனை செய்ய முடியாத தொழில் நுட்பம் வாய்ந்த கூடுகள் என்றால் அது மிகையாகாது. நாம் இயற்கையிடம் இருந்து கற்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அதனால்தான் என்னவோ, எங்களை வீட்டுக்குள் இருந்து அனைத்தையும் கற்று பண்டிதர் ஆகுங்கள் என்று, உன் பெருமிதத்தை காட்டி இருக்கின்றாய், போல் உள்ளது.
பேராசையினால் மனிதன் றொக்கட் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உனது வருகை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளமை ஒரு புறம் இருக்க, இன்னோரு புறத்தில் ஒவ்வோரு மனிதனும் சுயப் பிரகடனம் செய்து கொள்ளும் போக்கினை இன்று காணலாம். வீடுகளிலே தந்தை, தாய், பிள்ளைகள் ஒவ்வொருவரும் வேறு வேறு திசையில் பயணித்து ஒருவரை ஒருவர் முகம் பார்த்து புன்னகைக்காத தன்மையே காணப்பட்டது. ஆனால் இன்று உனது வருகை அனைவரையும் ஒன்றுபடுத்தி வைத்திருக்கின்றது. மனித உடலே நஞ்சாகி கொண்டிருக்கும் வேளை, அவர்களை இயற்கையின் பால் திசை திருப்பி விட்டிருக்கின்றாய்! நாளுக்கு நாள் அதிகரித்து வந்த ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்கான தேவை அதிகரிக்க, இன்று எல்லா வீடுகளிலும் வீட்டுத் தோட்டம் வெளி கிழம்புகின்றது.. நஞ்சுகளை உணவாக உட்கொண்ட மனிதர்களை, நீ சற்று சிந்திக்க வைத்திருக்கின்றாய்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், வங்கி நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து, வணிகச்சந்தைகள், மக்கள் கூடும் கழியாட்ட நிகழ்வுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், சொகுசு வாழ்க்கை வாழ்ந்த எங்கள் அனைவரினதும் நிலை என்ன? எதற்கும் அடங்காத மனித இனத்திற்கு நீ தகுந்த பாடம் புகட்டி இருக்கின்றாய். அதிக வெப்பம், இதனால் பனி உருகல், இதன் விளைவாக சமுத்திர நீர் மட்ட உயர்வு, கண்டங்கள் நீரினுள் செல்லும் அபாயம், கட்டுப்படுத்த கடல் தடுப்பு சுவர்கள் உருவாக்கம், பருவம் தப்பிய மழை, வரட்சி, இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு, இதை நம்பி இருந்த மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினை, அரசியல் தலையீடுகள், சுயநலப்போக்கு என்று உலகையே நிலைகுலைக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் தோன்றி உள்ள நிலையில், இதனை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத, நம்மை மீறிய சக்தி ஒன்று எமக்கு சவால் விடுவதாக உணர்ந்தேன். அது நீதானா? இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழுகின்றது. நீ இயற்கையின் பிள்ளையா? அல்லது சுயநலம் பிடித்த கயவர்களின் பிள்ளையா? என்று, எதுவாக இருப்பினும் மனிதனை மனிதனாக உணரவைத்துள்ளமையை இட்டு மகிழ்வடைகின்றேன்.
எனினும் உன் செயற்பாடு சர்வதேச மட்டத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமை இட்டு சந்தேகம் கொள்கின்றேன். உன் நிலை கண்டு, முதலாளித்துவ, சோசலிச, கம்êனிச நாடுகள் அனைத்தும் நிலை தடுமாறி நிற்கின்றது. பொதுவாக எந்த ஒரு விடயத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது மனித இயல்பு. இதற்கமைவாக உன்னை, தனக்கு சாதகமா மனிதன் பயன்படுத்துகின்றான் என்றால் அதில் வியப்பில்லை. அரசியல்வாதிகள், சமயவாதிகள், வணிகர்கள், கம்êனிசர்கள், சோசலிசர்கள், என்று அனைவருமே தனக்கு சாதகமாக உன்னை பயன்படுத்திக் கொள்வதை தெளிவாக பார்க்க முடிகின்றது. இது வருந்தத்தக்க ஒரு விடயம். நாட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டையாளும் தலைவர்கள் ஒப்பந்தங்களை மேற் கொள்வது அபத்தம்.
கொரோனா! உன் உருவாக்கம் பற்றி பல வாத, பிரதிவாதங்கள் இருக்குமிடத்து, உன் உருவாக்கத்தின் கருவறை பற்றியும், அதன் தந்திரோபாயங்கள் பற்றியும் உலக நாடுகளால் தற்போதைய நிலையில் அமர்ந்திருந்து வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகின்றது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் ëஹான் மானிலத்தில் வீரியம் அடைந்ததைத் தொடர்ந்து, அதன் ஏனைய மானிலங்களுக்கு இற்றை வரை பரவாமைக்குரிய காரணம் எதுவாக இருக்கும்? அத்தேடு நோய் பரப்பியாகிய நீ ëஹான் மாநிலம் தொட்டு, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மன், அமெரிக்கா, இந்தியா, இலங்கை என்று உலகில் 85ற்க்கு அதிகமான நாடுகளுக்குப் பயணித்து இருக்கின்றாய். ஆனால் வடகொரியா, ரஸ்யா போன்ற உன் அண்டை வீட்டாருக்கு(நாடுகளுக்கு) பரப்பாமல் போனமைக்குரிய கரணம் எதுவாக இருக்கும்? அவர்கள் ஏற்கெனவே உன் வீட்டாருடன் நட்புறவு பேணிக்கொண்டிருக்கிறார்களா? கொரோனா நீ, உன் தாயகத்தில் மட்டும், நொடிப்பொழுதில் வீரியம் பெற்று மறைந்துள்ளாய். இதில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? என்பதற்குரிய திடகாத்திரமான முடிவுகள் இன்னும் உன் அரசாங்கம் வெளியிடவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் பாவித்த தொலைபேசி தொடர்பு பாவனை இல்லாமையிட்டு இவர்கள் மேல் சந்தேகம் எழுகின்றது.
ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, உன்(கொரோனா) நாட்டு(சீனா) ஜனாதிபதி எந்த விதமான பாதுகாப்புக் கவசங்களும் இன்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார், எனில் உன்னை ஆக்கும், அழிக்கும்(குணப்படுத்தும் மருந்துகள்) கருவிகள் தன் வசம் இல்லாமலா இவ்வாறான துணிவு உன் அரசாங்க அதிபருக்கு வந்திருக்கும்? கடந்த காலங்களில் உன்னை அனுப்பியது சீனாதான் என்று சொல்லி வந்த நாடுகள் எல்லாம் இன்று உன்னை கட்டுப்படுத்த சீனாவால் மட்டும்தான் முடியும் என்று சொல்கிறது. இந்த இடத்தில் இச் சிந்தனையினை வழங்கியவர்கள் யாரென்று பார்த்தால்,அது உன் தாயகம்தான். வினை விதைப்பவன் வினையறுப்பான், தினை விதைப்பவன் தினையறுப்பான் தானே?
கொரோனா நீ ஒரு வணிக நோய் பரப்பியாகவே என் கண்முன் பார்க்கப்படுகின்றாய். ஏனெனில் உன் மூலமாக சீனாவின் இராஜதந்திரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. ஆபிரிக்கா, ஆசியா, ஜரோப்பா ஆகிய மூன்று கண்டங்களினையும் இணைத்து மிகப் பெருமளவிலான வர்த்தகத்தினை மேம்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட பட்டு வழிப்பாதையை தற்போது சிறு வித்தியாசத்துடன் ர்நடவா ளுடைம சுழயன எனும் திட்டத்திற்கு அமைவாக மாற்றி ஒரே நேர் கோட்டில் வர்த்தக நடவடிக்கைகளை சீனா கொண்டு செல்ல விரும்புகின்றது. இதன் உண்மத்தம் என்ன? இன்று நீ சென்றுள்ள நாடுகளில் பத்து இலட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் குவிந்தவாறே உள்ளது. தம் மக்களை காப்பாற்ற முடியாத மனித நேயம் கொண்ட தலைவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். உணவுபற்றாக்குறை, நாடுகளுக்குள் ஏற்றுமதி, இறக்குமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலாட்டும் சீனா தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது.
உதாரணமாக- சீனா பங்குனி 21ம் திகதி ஒரு இலட்சதிற்கு அதிகமான முக கவசம், கவச உடைகள் என்பவற்றினை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனாவில் இருந்து ஸ்பெயின் கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் கிலோ மீற்றர்(17 நாட்கள்) Àரம் கொண்டது. இதனை பட்டுவழிப் பாதையின் ஊடாக மேற்கொள்கின்றது. இதன் போது அதன் வழியில் உள்;ள நாடுகளுக்கும் உதவி செய்கின்றது. இதனால் அந் நாடுகள் உன் தாயகத்தை எதிர்த்துப் பேச முடியாத நிலை தோன்றும்.
உன் தாயகம் இயல்பு நிலைக்குத் திருப்பி உள்ள நிலையில் பல நாடுகளுக்கு மருத்துவப் பொருட்கள், முக கவசங்கள், இயந்திரங்கள் என்று பலவற்றை இறக்குமதி செய்கின்றது. ஜரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்துக்கும் ஆபிரிக்க நாடுகளான தென்னாபிரிக்கா, நமிபீயா, கென்னியா என்று பல நாடுகளுக்கும் மற்றும் கீழைத்தேச நாடுகளுக்கும் தனது தாராள தன்மையினையும், சுயநலத்தினையும் வழங்கி வருகின்றது. இது போன்று உன் தாயகம்(சீனா) பற்றிய இராஜதந்திர சுவாரஸ்சிய தகவல்கள் இன்னும் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவினை அழிப்பதற்கு ஆயுதத்தினால் முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை அழித்தால் மட்டும்தான் சீனா, அமெரிக்காவை வெல்ல முடியும். என்று 1999ம் ஆண்டு சீன படைத்தளபதிகள் இருவர் எழுதிய யுரளவநனெநச றழசடன றயச எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இப் பணியினை நீ(கொரோனா) நேர்த்தியாக செய்வதை இட்டு சீனா பெருமிதம் கொள்கின்றது. ஆனால் சர்வதே மட்டமே கலங்கித்தவிக்கின்றது.
கொரோனா உன் பெயர் கேட்டாலே அந்தமே கதி கலங்கி நிற்கின்றது. நீ தொற்றியவர்களை விட, உன் பெயர் கேட்டு உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உள்ளனர். பெரும்பாலும் நீ மக்களுக்கு பரவுவதை விட ஊடகங்களில் வெளிவருகின்ற வதந்திகள் பரவுவதே கூடுதலாக உள்ளது. இதனால் பல போர் நெருக்கடிகள், பொருளாதார கஸ்ரங்கள் என்று சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்த மக்கள் அதிகமாக பலவீனம் அடைந்துளளனர். உன்னால் வீதி விபத்துக்கள், தற்கொலைகள் குறைந்து விட்டன, ஆனால் சிறுவர் துஸ்பிரயோகங்களும், குடும்பச்சண்டைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன் நிலை உன் மறைவிற்குப் பின்னர்தான் மாறும்.
அத்தோடு ஊரடங்குச் சட்டங்கள் பிரகடனப்படுத்தி உள்ள நிலையில் உன் தொற்று வீரியம் குறைக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. ஆனால் பல அன்றாட கூலித்தொழில் புரிகின்ற மக்களின் நிலை இன்று கேள்விக் குறியாய் உள்ளது. அக் குடும்பங்கள் உணவுக்காக படும் பாடுகளை பார்க்கும் போது இரத்த நாளங்கள் கொதிக்கின்றது. வெளிநாடுகளுக்கு வயிற்றுப் பிழைப்பிற்காகவும், குடும்ப கஸ்ரங்களினாலும். சென்றவர்களின் நிலை என்ன? ஆட்சி அதிகாரங்களை நிலை நாட்டுவதற்காக அரசுகள் உதவி செய்வதாக பாவனை செய்கின்றது. இதனுள் இருக்கும் நரித்தனம் அப்பாவி மக்களை வாட்டிவதைக்கின்றது. எம் நாட்டைப் போன்ற கடனாளி நாடுகள் பேரம் பேசப்பட்ட நிலையில் உள்ள போது எத்தனை நாட்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க முடியும்? எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லக்கு என்ற நிலைதான் இன்றைய அரசியலில் உள்ளது.
நீ பரவி வருவதற்குரிய காரணங்கள் பலவாறு கூறப்படுகின்றது. இன் நிலையினை தவிர்க்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணி இல்லாவிட்டால் தண்டனை, கைகளைக் கழுவுவதற்கு திரவ நிலையில் விற்கப்படும் பதார்த்தங்ளை வாங்கு, நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் (மஞ்சள், பெருங்காயம், மிளகு, கொத்தமல்லி……) உணவு வகைகளை உட்க்கொள்ளு இல்லாவிட்டால் நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் மக்களை ஏமாற்ரி உலகளவில் பெரும் வணிகம் நடை பெறுகின்றது. இதனை அறியாத அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். சூழ்நிலைகள் தோல்வியாக மாறும் நிலை வந்தாலும் மனிதன் அதற்கு தகுந்தவாறு தன்னை மாற்றுவான் என்பதை நீ இப்போது புரிந்து கொண்டிருப்பாய்.
இவர்கள் சந்தைப்படுத்தும் வசீகர பொருட்களை விட உன்னை அழிக்கும் சக்தி வாய்ந்த பல்லாயிரக்கணக்காண மூலிகைகள் இன்று எம் மத்தியில் உள்ளது. கிளிசறியா, ஆமணக்கு, எருக்கலை, éவரசை, அலரி போன்றவை நோய் எதிர்ப்பு மரங்களாகும். இவையே எம் முன்னோர்கள் வீட்டு வேலி ஓரங்களில் நட்டுள்ளனர். அத்தோடு இலுப்பை, முந்திரிகை, ஆத்தி, வேம்பு, துளசி, கற்éரவள்ளி, மொசுமொசுக்கை, Àதுவளை, நாவல்மரம் போன்ற மருத்துவ குணம் கொண்ட மரம், செடி, கொடிகளையும் வீடுகளில் வளர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்துள்ளர். இத்தகைய மரங்களை காலணிய நாசகாறர்கள் எம் மத்தியில் இருந்து அழித்து விட்டு தம் சிந்தனையினை விதைத்துச் சென்று காலங்கள் கடந்தும் அவர்கள் சிந்தனைகள் வலுப் பெற்ற நிலையில், உன் வருகை இவற்றின் பால் ஈர்ப்பைக் கொடுத்துள்ளது. இவ் இடத்தில் நீ நல்லவனா? அல்லது கெட்டவனா? என மீண்டும் ஒருமுறை என் மனம் சிந்தைகொள்கின்றது.
தற்கால போட்டி மிகுந்த உலகில் மனிதனை மனிதனாக பார்க்க வைத்துள்ளாய் அது மாத்திரமன்றி, சர்வதேச மட்டங்களில் அரசியல், பொருளாதார ரீதியில் வீழ்ச்சியினை ஏற்படுத்திய அதே சமயம், உனது தாய் மண்ணிற்கு விசுவாசமான உளவாளியாகவும் தொழிற்படுகின்றாய். உன்னை விரட்டியடிக்க ஒரே வழி சர்வதேசமே ஒன்றினைந்து இன, மத, சாசி, மொழி, கலாசாரம் என்பவற்றினை களைந்து ஒன்றினைவது மட்டும்தான். உன்னை சாதகமாக்கிக் கொண்ட அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தம் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பிடிக்குள் அகப்படாமல், எங்களை நாங்கள் ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவும் எம் சமூகத்தையும், நாட்டையும், உலகையும் உன்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், நீ புகட்டிய பாடங்கள் எம்மை தெளிய வைத்துள்ளது. இதே தெளிவோடு சுயநலம் மிக்க உலகில் தனிமனித உயிர்களைப் பாதுகாத்து எம் தேசத்தையும் இந்த பிரபஞ்சத்தையும் உன்னிடம் இருந்து பாதுகாப்போம்.
அ.ஆன் நிவேத்திகா, கிழ.பல்கலைக்கழகம்