176
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த புதன் கிழமை(8) அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு குடும்பங்கள் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை கொரோனா சமுதாய பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று வெள்ளிக்கிழமை(10) காலை குறித்த கிராமத்தில் உள்ள இரு வீடுகளுக்கும் சென்று தனிமைப்படுத்தப்பட்ட குறித்த இரு வீடுகளிலும் உள்ள 08 உறுப்பினர்களுக்கு கொரோனா சமுதாய பரிசோதனைகளை மேற்கொண்டார்.
மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார துறை பணியாளர்களும் குறித்த வீடுகளுக்கு சென்றதோடு,கிருமி நீக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
மேலும் தாராபுரம் கிராமத்தை சுற்றி இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த 464 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #முடக்கப்பட்ட #தாராபுரம் #தனிமைப்படுத்தப்பட்ட #கொரோனா
Spread the love