இயலாதவனாய்…
நாற்சந்தி
நான்கடக்கவேண்டியசந்தி
நாலுபேர்தான்
நால்பக்கமும்இரும்புலக்கைகள்
நடுங்கிநிற்க
விளங்காபாசையில்
என்னமோகேட்க
விளங்கலஎன்றேன்
விறுவிறுபார்வை
விலாஎலும்பைநொறுக்கியது
இருதசாப்தம்கடந்து
இயலாதவனாய்……
கலங்கான், கற்றறிந்தான்…
குப்பிவிளக்கு
குடிசைவீடு
குறுகியவெளிச்சம்
ஒளிஎட்டும்வரைவிழிநீளூம்
கலங்கான், கற்றறிந்தான்…
கற்கமறுப்பு
பிணக்கானது
படிப்பதற்குவசதியில்லை
வாய்ப்பாக்கிகொண்டான்
கலங்கான், கற்றறிந்தான்…
நாய்களின்பேரொலி
பாதணிசத்தம்
அயல்இடங்கள்மயானஅமைதி
மனைஇருள்சூழும்
கலங்கான், கற்றறிந்தான்…
அவலக்குரல்
ஆவேசங்கொள்ளும்
அமைதிநிலவும்
அடிமைஇல்லை
கலங்கான், கற்றறிந்தான்…
கற்கசெல்வான்
காடையர்கள்துன்புறுத்தல்
கலங்கான், தொடர்வான்
கற்றறிந்தான்
கலங்கான், கற்றறிந்தான்…
பறந்தான், வளர்ந்தான்
பதவிகளில்அமர்ந்தான்
பேசினான்
பேசுபொருளானான்
கலங்கான், கற்றறிந்தான்…
குடிசைவீட்டான்
உலகைபடித்தான்
உலகிற்கு
பாடம்சொன்னான்
கலங்கான், கற்றறிந்தான்…
வ.துசாந்தன்