சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் என்பவரே இச்சாதனையை கண்டுபிடித்தவராவார்.சாய்ந்
இவரது முதலாவது கண்டுபிடிப்பாக மின் மோட்டார் மூலமாக மாவு அரிக்கும் இயந்திரத்தையும் இரண்டாவது கண்டுபிடிப்பாக சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தையும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது.