யார் ஏலவே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதைக் கண்டறிய புதிய சோதனைகளை அடுத்தவாரம் தொடங்குவதற்கு ஜேர்மனி தயாராகி வருகிறது. இந்தத் நோய்த்தொற்றுக்கு எதிராக வேலை செய்யும் நோக்கில் குருதியிலுள்ள குறித்த நோயினை எதிர்க்கும் ஆற்றலை இந்தச் சோதனை அறிந்துகொள்ளும். சோதனை என்ற விடயத்தில், பிரித்தமானியா உட்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி மிகவும் முன்னிலையிலுள்ளதை ஜேர்மனியின் இந்த சோதனை முயற்சி நினைவூட்டுகிறது.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற பிற முக்கிய ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், ஒரு நபர் தற்போது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த ஜேர்மனியர்கள் மிக அதிகமான நோயறிதல் சோதனைகளை இதுவரை மேற்கொண்டுள்ளனர்.
132 ஆய்வுகூடங்களிலுமாக ஒரு நாளுக்கு 116,655 சோதனைகள் கடந்த கிழமை இறுதிவரை ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறாக 1.3 மில்லியன் வைரஸ் தொற்றறியும் சோதனைகள் கடந்த கிழமை இறுதிக்குள் ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாறாக, இந்த மாத இறுதியளவில் ஒரு நாளைக்கு 100,000 சோதனைகளை நாளொன்றுக்குத் தான் செய்ய வேண்டுமென பிரித்தானிய நம்புகிறது. இந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வரை, பிரித்தானியா மொத்தமாக 316,836 சோதனைகளே செய்துள்ளது.
“வைரஸை பரிசோதிக்கும் திறனைப் பொறுத்தளவில் ஜேர்மன் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது என நாம் அறிவோம். நாம் அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என இங்கிலாந்து அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் கிறிஸ் விட்டி ஏப்ரல் 7 அன்று தெரிவித்தார்.
BBC