உயித்தெழுந்தபோது
கிறீஸ்து
முரட்டுத் துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்
தோமஸ்
திருக்காயங்களைச் சோதிக்க முன்னும் பின்னும்
கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான்
பூமியின் பாரம் குறையலானது
நாடு
முதியவர்களை
நாய்களைப்போலசாகவிட்டது
சைரனும் சேமக்காலை மணியும்
ஒலிக்காதபொழுதுகளில்
இத்தாலியர்கள்
ஆளரவமற்ற தெருக்களை
இசையால் நிரப்பினார்கள்.
கள்ளத் தீர்க்கதரிசிகள்
ஓடியொளித்தகால மொன்றில்
மருத்துவர்களே
சமூகத்தின் பேச்சாளர்களாக மாறினார்கள்
காற்றைப் பட்டங்கள் கைப்பற்றின
கடலை மீனினங்கள் கைப்பற்றின
வானத்தைப் பறவைகள் கைப்பற்றின
ஜலந்தரின்
மாசற்றவானில்
இமயமலை
ஒருநிலக்காட்சி ஓவியம் போல படர்ந்து கிடந்தது
கிறீஸ்து
மாஸ்க் இல்லாமல்
உயிர்த்தெழும் காலமொன்றுக்காக
பூத்திருக்குமாம்
கொன்றைமரம்
1 comment
கவிதை அருமை…
இயேசு உயிர்த்தெழுந்த ஒவ்வொரு காலத்திலும் இயற்கைச் சீற்றங்களும்
இன அழிப்புகளும்
நோய்மைகளும் நம் வாழ்வில் சூழ்ந்த ரணங்கள்…
நிலவுகின்ற கட்டுமானங்களைக் கட்டுடைக்கின்றது கவிதை…