பிரித்தானியாவின் மரண எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 917 உயர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,875 ஆக அதிரித்து 10 ஆயிரங்களை நெருங்கியுள்ளன. NHS தகவல்களின்படி, பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை இடம்பெற்ற கொரோனா வைரஸுக்கு நேர்மறை பரிசோதனையில் மொத்தம் 9,875 தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, இதுவரை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 18,091 சோதனைகள் அடங்கலாக 334,974 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, பரிசோதிக்கப்பட்ட 269,598 பேரில், 78,991 பேர் கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மரண எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது – 24 மணி நேரத்தில் 917 பேர் பலி…
152
Spread the love
previous post