247
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் மக்கள் அனைவரும் தமது இல்லங்களில் இருந்து பல்வேறுபட்ட தமது கலைப் படைப்புக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் வசிக்கும் கணேசினி சிறிதரன் எனும் பெண் பேனா மூலம் ஓர் ஓவியத்தை வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார். இவ் ஓவியமானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் பலரதும் பாராட்டையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். #சமூகவலைத்தளங்கள் #ஓவியம் #ஊரடங்கு
Spread the love