1975ஆம் ஆண்டு பங்களாதேசின் தந்தை என அழைக்கப்பட்ட அந்நாட்டின் முதல் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜீத் என்பர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த குற்றவாளியான அப்துல் மஜீத் 25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வார ஆரம்பத்தில் அப்துல் மஜேத்தின் கருணை மனுவை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து தலைநகர் டாக்காவில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
1975ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ சதியால் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த ராணுவ சதித்திட்டத்துக்குப் பின்னரும் சதி செயலுக்கு பிறகும் பங்களாதேசில் வசித்து வந்த அப்துல் மஜீத் 1996ஆம் ஆண்டில் பிரதமராக ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டதனையடுத்து அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது. #ஷேக்முஜிபுர்ரஹ்மான் #கொலை #அப்துல்மஜீத் #ஷேக்ஹசினா