Home உலகம் கொரோனா – 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்கள் பாதிப்பு

கொரோனா – 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்கள் பாதிப்பு

by admin


கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி வரை 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள சுகாதார நிறுவனம் இத்தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவப் பணியாளர்களே முழுமையாக கவனித்துக்; கொள்கின்றனர் எனவும் அது பரவாமல் இருக்க அவர்கள் போராடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது. #கொரோனா #மருத்துவபணியாளர்கள்  #உலகசுகாதாரநிறுவனம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More