அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரிவதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான காலம், ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.