237
வின்மீன்களும், தாரகைகளும்
அளந்தறிய இயலாத,
பெரும் பரப்பில்
இயங்கியும் இயக்கியும்
பால்வெளியின் உலகம்.
வின்மீன்கள் அசைவற்றுப் போகும்.
தாரகைகள் ஒளியிழந்து போகும்.
நிச்சயமற்றதொரு எதிர்காலம்,
உக்கிரம் பெற்றிருக்கும்
ஊழிப்போலானதொரு காலத்தில்…
நம்பிக்கையின் திறவுகோல்களான
அறிவுமுறைகள்,
ஏற்றத்தாழ்வுகளுடன் ஆயினும்
மனித உயிரிருப்பிற்கும், வாழ்விற்கும்
முனைவு கொள்ளும் அறிவியல் இயக்கம்.
நமக்குரியதாகி இருக்குமொரு
அரிதான, அச்சந்தருவதான காலத்தில்
நட்சத்திரங்களை விற்று நடக்கும்
வியாபாரம்
ஊரடங்கு வேளையிலும்…
சி.ஜெயசங்கர்.
Spread the love
1 comment
கவிதை அருமை..
நட்சத்திரங்களையும் வியாபார சந்தைக் கலாச்சாரத்திற்குள்
உட்படுத்தும் தன்மையைக் கவிதை பேசியுள்ளது சிறப்பு..