151
கடவுளர் உளரேல்,
தாயினும் மேலான தயையுடையாரவர்.
பேய் பூதமெனப் பீதியூட்டும்
தகைடையார் அல்லர் அவர்….
உள்ளதான இந்த உலகம்
உய்ய உயிர் வாழும்,
மனிதருள்ளம் குடிக்கொள்ளும்
வல்லாரவர்….
புத்தியிலுறைந்து பல்லுயிரோம்பும்
பக்குவந்தரும் பண்புடையாளரவர்.
தொடவும், தொடாதிருக்கவும்
உள்ளிருக்கவும், வெளியகற்றவும்
தீட்டுப் பார்க்கும் குணமுடையார்
அல்லார் அவர்…
எவரும், எதுவும், அவர்முன்னம்
சமம், சரிசமானம்.
எம்முள் இருக்குமவர்,
எம்முடன் இருக்குமவர்,
இவ்வுலகுடையார்.
எவருக்கும் அவருடையார்
எவரிலும் அவருடையார்…
சி.ஜெயசங்கர்..
Spread the love