154
பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் , மருத்துவ மாதிரிகள் மற்றும் அறிக்கைகளை அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களை கடந்த 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பத்து பத்து பேராக பரிசோதனைக்கு உட்படுத்திய போது , முதல் நாள் 3 பேர், மறுநாள் 3 பேர் என 6 பேர் கொரொனோ தொற்றுக்கு உள்ளானார்கள் என அடையாளம் காணப்பட்டனர். 14 பேர் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்டனர்.
அன்றைய தினம் அடையாளம் காணப்படாத 14 பேரையும் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் பரிசோதித்த போது , அவர்களில் 08 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அந்நிலையில் மேலதிக பரிசோதனைக்காக குறித்த 8 பேரினுடைய மருத்துவ மாதிரிகள் மற்றும் பரிசோதனை அறிக்கைகள் என்பவற்றை யாழ்.போதனா வைத்திய சாலை ஊடாக அனுராத புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #பலாலி #தனிமைப்படுத்தல் #அறிக்கை
Spread the love