169
பாறுக் ஷிஹான்
ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(17) இரவு 9 மணியவில் அம்பாறை மாவட்டம் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை(17) காலை பிரவச வலி என 29 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன் 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் பெண் குழந்தை 2620 கிராம் ,மற்றும் ஆண் குழந்தைகள் தலா2410 கிராம், நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக கொரொனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #நிந்தவூர் #குழந்தைகள்
Spread the love