(க.கிஷாந்தன்)
நுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பகுதியளவு எரிந்து சாம்பலாகியுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர். இத்தீ விபத்து 18.04.2020 அன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா காவல்துறையினர்;, மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், பொது மக்கள், இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #நுவரெலியா #சுப்பர்மார்க்கட் #தீவிபத்து