Home இலங்கை இலங்கையின், புதிய விசாலமான கிராமியக் கடன் திட்டம்

இலங்கையின், புதிய விசாலமான கிராமியக் கடன் திட்டம்

by admin
ஊடக வெளியீடு –  2020.04.16
image.png
NCRCS : New Comprehensive Rural Credit Scheme – புதிய விசாலமான கிராமியக் கடன் திட்டம்

புதிய விசாலமான கிராமியக் கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டி வீதத்தில் பின்வரும் 36 பயிர் வகைகளுக்கு 5 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இந்தக் கடன் அரச வங்கிகளினால் வழங்கப்படுவதுடன், 09 மாத காலப்பகுதியினுள் இதனை மீளச் செலுத்த வேண்டும்.
கடன் திட்டத்திற்கு ஏற்புடைய பயிர் வகைகள் 
நெல், மிளகாய், வெங்காயம், கௌப்பி, பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, கிழங்கு, வற்றாளைக் கிழங்கு, மரவள்ளி, சேப்பங் கிழங்கு, மரக்கறிகள், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், போஞ்சி, கோவா, கரட், கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், முள்ளங்கி, நோல்கோல், பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், இஞ்சி, கரும்பு
செழிப்பான நாடு திட்டத்திற்கான கடன்

புதிய விசாலமான கிராமியக் கடன் திட்டத்தின் கீழ் செழிப்பான வீட்டுத் தோட்டங்கள் திட்டத்தில் வீட்டுத் தோட்டமொன்றுக்கு மேற்குறிப்பிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்காக உயர்ந்தபட்சம் ரூ.40,000க்கு உட்பட்ட வகையில் 4% வட்டிக்கு அரச வங்கிகளினால் கடன் வழங்குவதற்கு மத்திய வங்கியின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு அரசாங்கத்தினால் செலுத்தப்படும் கடன் நிவாரணம் 5% என்பதுடன், கடன் பெறுபவரின் வட்டி 4% ஆகும்.

ஊடகப் பிரிவு
அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More