226
பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அங்கு கடமையாற்றிழய 100 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் காரணமாக இவ்வாறு குறித்த வைத்தியசாலை மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் #பன்னிப்பிட்டிய #வைத்தியசாலை #சவேந்திரசில்வா
Spread the love