192
பாறுக் ஷிஹான்
அம்பாறையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் ககண்டுபிடிக்கப்பட்டள்ளது.
இந்த இயந்திரம் இன்றைய தினம் புதன்கிழமை (22) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் அவரது காரியாலயத்தில் வைத்து செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டதுடன், அவரிடம் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
அம்பாறை டி.எஸ்.சேனாயநாயக்க கல்லூரியில் உயர்தரம் தொழில்நுட்பப்பிரிவில் கல்வி கற்று கடந்த வருடம் உயர்தரப்பரீட்சை எழுதி பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கிறார். இந்த இயந்திரத்தினை அலுவலகங்கள், வங்கிகள் போன்ற மக்கள் பாவனையுள்ள இடங்களில் பொருத்திப் பயன்படுத்த முடியும். #அம்பாறை #சேனாநாயக்ககல்லூரி #தானியங்கி #கண்டுபிடிப்பு
Spread the love