142
நிவாரணம்
………..
புன்னகை பூத்த முகங்களே எதிர்பார்ப்பு.
எனினும்
பயந்தது போல்
ஏக்கம் நிறைந்த விழிகளே
மனதை உறுத்திக் கொண்டுள்ளது.
வாயில் இருந்து வடை விழ
பறந்து சென்ற காகத்தின் தவிப்புடன் திரும்பி சென்ற பெண்கள்.
காலடி வந்தவை
கண்ணில் பட்டும்
கைசேரா நிலையில்
ஏமாற்றங்களின்
புறு புறுப்புக்கள் சர சரத்தன.
“அவங்கட கஷ்டம்தான் எங்களுக்கும் “
சமத்துவம் பேசும் பெண்களாய் அவர்கள்.
“அவங்க எங்கட கூட்டத்திற்கு
வந்தவங்க”
நீங்க…
விசாரிங்க நீங்க போனது ஆர் வைச்ச கூட்டம் என்று:”
பாரபட்சம்….சாகவில்லை…
கூப்பிட்டும் கூட்டத்திற்கு வராத அப்பாவி சனங்களை
பழிவாங்க பொருத்தமான
சந்தர்ப்பங்கள். …இவை..? .
வடையை நழுவ விட்டு
வயிற்றுப் பசியுடன்
காத்திருந்த காகங்கள் பறக்க
நிவாரணங்கள்
அடுத்த ஊருக்கும்
தொடரும்….
விஜயலட்சுமி சேகர்
April 2020
நிழல் தரும் மரங்கள்
ஓரிரு நட்சத்திரங்கள்
பற்றிக் கொள்ள
பாசமுடன் கைகள் – எம்
பயணங்கள் தொடர்ந்தன…
மீண்டும் ஓர் இருண்ட பொழுது
21. 04. 2019.
இருள், பயம் சுமை…
உள்ளங்கள் இறுக
பாதைகள் சுருங்கின.
தடுமாறிய பொழுதில்,
கைப்பற்றல்கள்
மீண்டும் தொடர்ந்தன.
எம் விரல்களிடை
வல்லமை உள்;ள
நட்சத்திரங்கள் முளைத்தன.
சுற்றிய பூமிப் பந்து
21.04. நாளின் நினைவை
சுமந்தப்படி…
நாளை வரும் நாளில்
21. 04. 2020.
நினைவுகள் சுகமடைய,
உறவுகள் வந்து சேர,
குடும்பங்கள் இணைந்து வாழ,
அனைத்து உறவுகளுக்காகவும்,
விளக்கேற்றி
நம்பிக்கை ஒளியினை
பரவச் செய்வோம்.
விஜயலட்சுமி சேகர்.
Spread the love