Home இலங்கை “புலிகள் பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்பதை ஒருபோதும் ஏற்கமாட்டேன்” – கருணா அம்மான்…

“புலிகள் பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்பதை ஒருபோதும் ஏற்கமாட்டேன்” – கருணா அம்மான்…

by admin

“தமிழீழ விடுதலப்புலிகள் பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம்.இந்த போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒருவர் விடுதலைப்புலி இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையோ விமர்சிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர்   அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  புதன்கிழமை(22)  ஊடக சந்திப்பில்  கலந்துகொண்ட கருணா,

“அண்மையில் வெருகல் படுகொலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நினைவு கூர்ந்த போது அந்த கட்சியின் மகளிர் அணி தலைவி விடுதலைப் புலிகள் பாலியல் வன்பணர்வு,  கொலை போன்றவற்றில் ஈடுபட்டார்கள் என்று கூறியிருந்தார் . பாலியல் வன்பணர்வு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம். இந்த போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒருவர் விடுதலைப்புலி இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையோ விமர்சிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் ஒரு கருத்து முரண்பாடு இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். பல்லாயிரக்கணக்கான போராளிகள் இந்த போராட்டத்தில் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள் அவர்களின் வீரத் தாய்மார்கள் உறவினர்கள் இருக்கிறார்கள் எழுந்தமானமாக விடுதலைப்புலிகள் பாலியல் வன்பணர்வு போன்றவற்றில் ஈடுபட்டார்கள் என்று கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் அவற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்” என கூறினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை கல்முனையில் பிரார்த்தனை.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் மாலை மெழுகுதிரி ஏற்றப்பட்டு யேஇடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இத்தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறியே புதன்கிழமை(22) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வானது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் வழிநடத்தலின் அக்கட்சியின் பிராந்திய அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது சிறுவர்கள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்களுக்கு மெழுகுதிரிகளை ஒளிர வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இடைநிறுத்தப்பட்டது உண்மை..

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் தனது கட்சி ஆதரவாளர்களுடன் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22) ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் குறித்த பட்டதாரிகளில் மனித வாழ்வை வைரஸ் பரவாமல் இருப்பதற்கு கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நன்மை கருதி தான் இந்த வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .ஏனென்றால் மக்கள் ஒன்று கூடுவதை குறைப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அரசாங்கம் கிராம சேவையாளர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் போன்றவர்களை பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு என்பது வழங்கப்பட்டுள்ள ஒரு விடயம் .ஆகவே நீங்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அனைவரும் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார்.

வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள,  இலவசமாக பயிர் விதைகளை  வழங்கத் தயார்…

வீட்டுத் தோட்டங்கள் மேற்கொள்வதற்கு மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன். இக்காலகட்டத்தில் சுய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது அதற்கு நாங்களும் உறுதுணையாக செயற்பட இருக்கின்றோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் தனது கட்சி ஆதரவாளர்களுடன் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22) ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

கொரோனா வைரஸ் அதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்தாலும் இன்று அனைவரும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி வாழும் சூழ்நிலையை இந்த வைரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வைரஸ் பரவல் இருந்தாலும் ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கின்றது. காலகட்டத்தில் சுய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது அதற்கு நாங்களும் உறுதுணையாக செயற்பட இருக்கின்றோம்.

வீட்டுத் தோட்டங்களில் மேற்கொள்வதற்கு மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன். காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் சுயதொழில் வீட்டுத் தோட்ட பயிர்கள் வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் உண்மையில் அவர்களை பாராட்ட வேண்டும். விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது இதுவும் ஒரு சிறந்த திட்டமாக பார்க்கின்றோம்.

எமது மக்கள் சுயதொழில் மூலம் முன்னேற்றம் காண வேண்டும் எதற்கெடுத்தாலும் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு செல்லக்கடாது
பிறரிடம் கையேந்தும் தேவையற்ற செயற்பாடுகள் மூலம் எமது சமூகத்தை கேவலப்படுத்துகின்றனர் . இன்று பல அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவெளிநாட்டு அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பிட்ட அளவு பொதிகளை வழங்கி விட்டு மீதிப் பணத்தை கையாடல் செய்து செய்து வாழும் கேவலமான நிலைக்கு செய்கின்றனர் இவ்வாறான சூழ்நிலைகளில் நமது மக்கள் சுயமாக தைரியமாக நின்று செயற்படுவதற்கு அனைத்து மக்களும் தயாராக வேண்டும்

குறிப்பாக எமது வடக்கு கிழக்கு மக்கள் யுத்தகலத்தில் பல துன்பங்களைச் சுமந்து வாழ்ந்தவர்கள் அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் எமது மக்கள் ஒருவரிடமும் கையேந்த வில்லை அண்மைக்காலமாக இந்த நிலைகள் மாற்றமடைந்து வருகின்றது இந்த நிலையை நாங்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது யுத்த காலங்களில் எந்த சூழ்நிலையை பயன்படுத்தினோமோ அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

வன்னியிலே யுத்தம் நடைபெறும் போது மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை இருந்தாலும் அங்குள்ள மக்கள் சுயமாக வாழ்க்கைகளை நடத்தியிருந்தார்கள் கௌரவமாக வாழ்ந்தார்கள் எதற்காக கவலைப்பட்டதில்லை கையேந்தி ஏதுமிலலை பட்டினியால் மடிந்தவர்கள் கூட இல்லை அவ்வாறு சூழ்நிலையை எதிர்கொண்டு வந்த ஒரு சமூகம் என்பதை அனைத்து மக்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

எனக்கு பல இளைஞர் யுவதிகள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தங்களை வெளி மாவட்டத்திலிருக்கும் தங்களை தங்கள் சொந்த இடங்களுக்கு கூட்டிச் செல்லுமாறு தம்மிடம் தெரிவிக்கின்றனர். நாளாந்த கூலி வேலைக்காக சென்றவர்கள் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். என்பது இந்த ஊடக சந்திப்பில் ஊடாக அரசாங்கத்திற்கு வேண்டிக் கொள்கின்றேன். அவர்களைப் பரிசோதிப்பது என்றால் அண்மையிலுள்ள புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள். அவர்களை கொழும்பு மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறுவது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் ஏனென்றால் நேற்று பாகிஸ்தானில் இருந்த இலங்கை மாணவர்களை கூட இருந்து விமானம் மூலம் அழைத்து வந்திருந்தார்கள். இருக்கும் போது எமது நாட்டுக்குள் இருப்பவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது இந்த விடயம் என அரசுக்கு தெரியவில்லையா அல்லது இதனை பாராமுகமாக பார்த்துக்கண்டிருக்கிறார்கள். என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை அரசு கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பதே இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More