சூரிய வெளிச்சமும், கிருமிநாசியும், வைரஸ் தொற்றை கொல்லும் என்று அதிகாரி ஒருவர் கூறியதையடுத்து, கோவிட்-19 சிகிச்சைக்காக கிருமிநாசினியை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தும் வாய்ப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்திருக்கிறார்.
கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்திவிட்டு, பின்னர் நோயாளிகளின் உடல் மீது புறஊதா கதிர்களை பாய்ச்சலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டதை தொடர்ந்து, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அதிபரின் இந்த யோசனை உயிரிழப்பில்தான் முடியும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது பொருப்பற்ற பேச்சு என்பதோடு, மிகவும் அபாயகரமானது என்று ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.