இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு


இலங்கையில் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 414 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த 30 பேர் புதிதாக இனங்காணப்பட்டமையை தொடர்ந்து இந்த எண்ணிக்கை 414 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதன்படி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #இலங்கை #கொரோனா  #உயர்வு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.