Home உலகம் பிரித்தானியாவில் எழுநூறுகளால் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள் – மொத்த எண்ணிக்கை 19,499 ஆக உயர்ந்தது….

பிரித்தானியாவில் எழுநூறுகளால் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள் – மொத்த எண்ணிக்கை 19,499 ஆக உயர்ந்தது….

by admin


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 761 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேர இந்த இறப்புகளுடன் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது. இந்த இறப்புகளில் இங்கிலாந்தில் 587 பேர் மரணித்ததனை NHS உறுதிப்படுத்தியுள்ளது. 174 மரணங்கள் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பிராந்தியங்களில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்கள் 40 முதல் 102 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், அவர்களில் 34 பேருக்கு உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இந்த 761 இறப்புகள் முந்தைய நாள் இறப்பான 616 ஐ விட 24% உயர்வானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் ஸ்கொட்லாந்தில் மொத்தம் 1,184 நோயாளிகள் பலியாகி உள்ளனர். #பிரித்தானியா  #கொரோனா  #இறப்புகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More