Home இலங்கை ‘சமூகத்தின் பார்வையில் கணவனை இழந்த பெண்களின் நிலை’ – ரவிச்சந்திரன் சாந்தினி..

‘சமூகத்தின் பார்வையில் கணவனை இழந்த பெண்களின் நிலை’ – ரவிச்சந்திரன் சாந்தினி..

by admin

ஆயிரமாயிரம் ஆண்டு கடந்தாலும் ஆதவனின் விடியலில் மாறாத நிலையே கணவனை இழந்த பெண்களின் போராட்டம். சமூகத்தின் பிடியில் ஊரடங்கும் நிலையாய் ஓரடக்கம் செய்யும் நிலையினையே கணவனை இழந்த பெண்கள் அனுபவித்து வருகின்றனர் இவ் பூமிதனில்

‘மண்ணில் மாதராய் பிறந்திடவே
மாதவம் செய்திடல் வேண்டும்’

அந்த வகையில் தான் இயற்கையின் மீதும் தன் மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மீகம், மொழி, இலக்கியம்,சமூகம், வாழ்கை பரிமானங்கள் ஆகியவற்றை பண்பாடு உள்ளடக்கியது. பண்பாடு என்பது சமூகம் வாழும் முறையை விளக்குகிறது. அந்தவகையில் சமூகத்தில் கணவனை இழந்த பெண்களை சாதி,சமய,மொழி,ஆடை அணியும் விதம் கலாச்சாரக் கூறுகள் என்ற ரீதியில் கட்டுப்படுத்தி பார்க்கிறது.

விதையூன்றி பூப்பதற்கு
பூலோகம் சலித்திடுமா?
மூவுலகம் கூடிநின்று
வெண் மலரை காத்திடுமா?
வண்ணமயமாக்க….

இவ்வாறு பெண் என்பவள் கணவனை இழந்த நிலையில் சமூகத்தின் பார்வைதனில் நிறைவேறாத ஆசைகளுடனும், கனவுகளுடனும் காத்துக் கிடக்கிறாள் என்பதே உண்மை.

பெண் என்பவள் உலகம் போற்றும் உண்மைத் தெய்வத் தாயிற்கு இணையாக போற்றப்பட வேண்டியவள் ஆவாள். சமூகத்தின் பார்வையில் அன்னை சரஸ்வதி தாய் வெள்ளை நிற ஆடை அணிந்து தாமரை மலரில் வீற்றிருக்கும் போது கைகூப்பி வணங்கும் சமூகம் கணவனை இழந்த ஒரு பெண் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தால் அவளை தூற்றி மன உணர்வுகளை உடைத்து பாரதூரமாய் ஒதுக்கி வைக்கின்றது.

தினந்தோறும் நெருப்பில் உயிர்க்கும் ஓர் கறுப்பு வெள்ளை தேவதை அவள். எந்த ஒரு கலாச்சார நிகழ்வுகளிலும், சுப காரியங்களிலும் தனது சொந்தப் பிள்ளைகளினதும் சுப நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள விடாமல் புறம் தள்ளி வைக்கிறார்கள். உதாரணமாக பெண்ணின் கர்ப்ப காலத்தில் அவளுடைய மகிழ்விற்காக செய்யும் வளைகாப்பு நிகழ்வில் கூட அணிவிக்கும் சந்தர்ப்பத்தினை வழங்காது. காரணம் கணவனை இழந்த பெண் என்பதால் இவ்வாறான சுபகாரியத்தில் முன் நின்றால் நன்மை பயக்காதாம்.

துரதிஸ்ட வசமாக இளவயது திருமணம் அதிகளவில் நடக்கிறது இவ்வாறான இளவயது திருமணங்கள் குறிப்பிட்ட காலம் மட்டுமே நீடிக்கும். அந்த நிலையில் ஆறுதல் கூறக்கூட எவரும் முன்வருவதில்லை சமூகத்தின் பார்வை தற்கால சூள்நிலை போல கொரோனாவின் ஆட்டம் சில காலங்களில் அதன் கொடூரம் மறைந்து போகும் மாற்றம் உண்டாகும். ஆனால் சமூகத்தில் என்றென்றும் விடியலை காணாத கோலமே கணவனை இழந்த பெண்களின் நிலை.  கணவன் இருக்கும் போது திருமணத்தின் போது ஆபரணங்களால் அலங்கரித்து காணும் சமூகம் அதே ஆபரணங்களை கணவனை இழந்த பிறகு அணியும் போது குற்றம் காணுகிறது.

எனக்கே எனக்காய் பல கனவுகள்
அது எனை பாதியில் விட்டுப்போன
ஒருவரால் சிதைக்கப்படுவது
என் வாழ்வின் சாபமோ???

இவ்வாறாக பல கேள்விகளை சுமந்தவளாய் இந்த நிலை ஏன் சமூகங்கள் இவ்வாறான பெண்கள் மீது சுமத்தும் மூட நம்பிக்கைகள் இவர்களின் வாழ்விற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

கணவனின் நினைவால் கவலை கொள்ளும் இவ்வாறான பெண்களின் வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்கு சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் தேவையில்லாத கட்டுப்பாடுகளை ஒழிக்கவேண்டும். கலாச்சாரம் அதன் பின்னணியாக கொண்ட இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பெண் தலமைத்துவம் அதிகம் காணப்படுகின்றது. அவ்விதம் குடும்ப நலனுக்காக சுறுசுறுப்புடனும், அதிகாரத்துடனும் செயற்படும் பெண் கணவனை இழந்த பிறகு அவளை சமூகத்தில் மட்டம் தட்டி அதிகாரமற்ற நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள்.

எல்லா உயிர்களுக்கும் ஒரு உணர்வு உண்டு அவ்வாறே கணவனை இழந்த பெண்களுக்கும் உணர்வு இருக்கிறது. இதனை உணராத சமூகம் மூட நம்பிக்கையால் இவர்களில் உணர்வுகளை மதிப்பிளக்க செய்வதோடு பெரிய குற்றமிழைத்தவர் போல அந்தப் பெண்ணை ஒதுக்கி வேதனைப்படுத்துவதோடு உணர்வுகளின் வட்டத்தில் காயப்படுத்துகிறார்கள்.

உதாரணம்:
அன்றைய காலகட்டத்தில் கணவன் இறந்துவிட்டால் அவனது மனைவி அவனை தகனம் செய்யும் தீயில் தானும் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை அன்றைய பழக்கம் நடைமுறையில் இருந்தது.

வருமானமோ தொழில் வாய்ப்போ இல்லாதவர்கள் சமூகத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவிக் வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவ்வாறே கணவனை இழந்த பெண் சற்று வாட்டசாட்டமான உடல் அமைப்பை கொண்டவளாக இருந்தால் அவளுக்கு சமூகத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேரிடும்.
எனவே தான்
‘ தனிமையின் ரனம்
எதிர்காலத்தின் பயன்
சொந்தங்களின் சுயநலம்
சுப காரியங்களில் ஒரு ஓரம்
இது தான் சமூகம் அவளுக்கு
விதித்த முகமோ….’

என்று கணவனை இழந்த நிலையில் சமூக கட்டுப்பாடுகளை விதிக்காது பண்பாட்டின் நிலையில் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் எனது அன்னை , சகோதரி கணவனை இழந்தால் அவளது வாழ்விற்கு எவ்வாறு உதவி செய்ய முன்வருவமோ அவ்வாறு அவளை உடல், உள ரீதியாக காயப்படுத்தாமல் ஒவ்வொரு நாட்டின் கண் காயப்படுத்தியவளை சிறு ஆறுதலாக அவர்களின் வாழ்கைக்கு நல்லதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும்.
மேலும் சமூகத்தில் இவ்வாறான பெண்களைப்பற்றி வலுப்பெற்றுள்ள தாழ்வு மனப்பான்மையை முற்றாக நீக்கவேண்டும். அவள் கணவனை இழந்து இருந்தாலும் அவளும் எங்களைப் போன்ற உயிரே… . பொருளாதாரத்தை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்பதை விட! இந்த சமூகப்பார்வையை எப்படி சமாளிக்க போகின்றோம் என்பதை விட! இந்த சமூகப்பார்வையை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்றுதான் கவலைப்படுகிறாள்!

‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோம்!!
பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்!!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சாதியென்ற நாமும்
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்!!
ஆசைக் காதலை கைகொட்டி வாழ்த்துவோம்!!
துன்பம் தீர்த்து பெண்மையி னாலடா!!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்..

இவ்வாறு கணவனை இழந்த பெண்களுக்கு உதவும் படியான வாழ்கை திறன் வழிகளை ஏற்படுத்துவதோடு அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்தி தருவதிலும் அரசு சமூகம் சார் நிலை கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆயிரக் கணக்கான பெண்களை நொறுக்கிய வெறுமையும், வெற்றிடமும் முடிவுக்கு வரலாம் என்பது எனது சுய கருத்து என்பதை முன் வைக்கிறேன்.

ரவிச்சந்திரன் சாந்தினி
நுண்கலைத் துறை.
கி.ப.க.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More