Home உலகம் UKயில் முடக்கத்தை தளர்த்தினால், 100,000 பேர் இறக்கநேரிடும் என எச்சரிக்கை…

UKயில் முடக்கத்தை தளர்த்தினால், 100,000 பேர் இறக்கநேரிடும் என எச்சரிக்கை…

by admin

Professor Neil Ferguson warned the number of deaths from coronavirus in the UK could reach 100,000 this year if

வயது முதிர்ந்தவர்களை மட்டும் நடமாடாமல் பாதுகாத்துக்கொண்டு நடமாட்ட, முடக்கத்தைப் படிப்படியாக நீக்குவது அமுல்படுத்தப்பட்டால், ஓகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 60,000 வரையானோர் இறந்துவிடுவர் எனவும் இந்த ஆண்டுக்குள் 100,000 பேர் இறக்கநேரிடும் எனவும் புதிய ஆய்வு காட்டுவதாக தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் நீல் பெர்குசன் எச்சரிக்கிறார்.

நோய்த்தொற்றுக்கு இலகுவில் ஆட்படக்கூடிய பலவீனமானவர்களின் நடமாட்டத்தை மட்டும் முடக்கியவாறு, ஆரோக்கியமான இளைஞர்களை மட்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதொன்றென்றும், அப்படிச் செய்தால் மேலும் இறப்புகள் அதிகரிக்குமென்றும் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியரும் தொற்றுநோயியல் நிபுணருமான நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

பலவீனமானவர்களின் நடமாட்டத்தை மட்டும் முடக்கியவாறு ஏனையோரை நடமாட அனுமதித்ததில் எந்த நாடும் வெற்றிகாணவில்லை என்பதை சுட்டும் இந்தப் பேராசிரியர் நடமாட்டத்தை முடக்க வேண்டுமென்பதை இறப்புகள் தொடர்பான எதிர்வுகூறல்களைச் சொல்லியபடி வலியுறுத்தி வருகிறார்.

இந்த வைரசிற்கு எதிரான அதனைக் கொல்லக்கூடிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை சமூக தனிமைப்படுத்தல் அவசியமானது என இந்த பேராசிரியர் மேலும் வலியுறுத்திச் சொல்லுகிறார். அப்படித் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு 2021 வரையில் வாய்ப்பில்லை என வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராப் இன்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடர்ந்தால் கூட ஓகஸ்ட் மாதமளவில் பிரித்தானியாவில் கொரொனோத் தொற்றிலான உயிரிழப்புகள் 60,000 இனைத் தாண்டும் என வாசிங்டன் பல்கலைக்கழகம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The number of deaths from coronavirus in the UK increased by 813 yesterday, the sixth highest daily increase since the pandemic began. The number of infections rose by 4,913

 The number of deaths from coronavirus in the UK increased by 813 yesterday, the sixth highest daily increase since the pandemic began. The number of infections rose by 4,913

The number of people to have tested positive for coronavirus increased by 4,913 to 148,377, it was revealed at a on Saturday afternoon

The number of people to have tested positive for coronavirus increased by 4,913 to 148,377, it was revealed at a on Saturday afternoon

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More