129
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 413பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேர இந்த இறப்புகளுடன் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 20,732 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இந்த 413 இறப்புகள் முந்தைய நாள் இறப்புகளை விட அரைவாசித் தொகை எனவும் கடந்து செல்லும் வாரத்தின் குறைவான இறப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு உள்ளான 4,463 பேருடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 152,840 ஆக அதிகரித்துள்ளது.
#பிரித்தானியா #கொரோனா #இறப்புகள்
Spread the love