195
முல்லைத்தீவு – கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அவரது உடல்; முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கேப்பாபுலவு #தனிமைப்படுத்தல் #உயிரிழப்பு #கொரோனா
Spread the love