பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு்ளதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாகவும், மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரா.சம்பந்தனுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.