என் மரணத்தை அறிவிக்கவும் மருத்துவர்கள் தயாராக இருந்தனர் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி வழங்கிய நேர்காணலிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி, லண்டன் செயிண்ட் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் உடல்நிலை மோசம் அடைந்து மரணத்தின் விளிம்புக்கு சென்றார். எனினும் அங்கிருந்த மருத்துவர்களும் தாதியர்களும் தீவிர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினர். இப்போது அவர் முழுமையாக குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ள நிலையில் அவர் வழங்கிய நேர்காணலில் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய நேர்காயல் வருமாறு
கொரோனா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம், மிகவும் கடினமானது. நான் அதை மறுக்கவில்லை. என் மரணத்தை அறிவிக்கவும் மருத்துவர்கள்; தயாராகி விட்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் அப்போது மிக மோசமான நிலையில் இருந்தேன். அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஏதேனும் விபரீதம் நடந்து விட்டால் என்ன செய்வதென அடுத்த கட்ட ஏற்பாடுகளையும் மருத்துவர்கள் தயாராக வைத்திருந்தனர்.
அவர்கள் எனக்கு முக கவசம் அணிவித்து விட்டு லீட்டர் லீட்டராக ஒக்சிஜன் செலுத்தினார்கள். நீண்ட நேரம் இது நடந்தது. எனது மூக்கு வேலை செய்யவில்லை. முதலில் நான் மருத்துவமனைக்கு போகவே விரும்பவில்லை. ஆனால் அப்போது அனைவரும் என்னை மருத்துவமனைக்கு போக கட்டாயப்படுத்தியது சரிதான் என்பதை இப்போது உணர்கிறேன். சில நாட்களிலேயே என் உடல்நிலை இவ்வளவு மோசமாகி விடும் என நம்புவதே கடினமாகி விட்டது. நான் விரக்தி நிலைக்கே போய்விட்டேன். நான் ஏன் நன்றாக முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு கெட்ட தருணம் வந்தது.
என் சுவாச குழாய்க்கு அடியில் ஒரு குழாயை வைப்பதற்கு 50 சதவீத தேவை வந்தது. அதை எப்படி செய்வது என மருத்துவர்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். இதற்கு மருந்து இல்லை. குணப்படுத்த முடியாது என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். இதில் இருந்து நான் எப்படி மீளப்போகிறேன் என நினைத்தேன்.
முதல்முறையாக என் இறப்பைபற்றி நான் நினைத்தேன். பல முறை நான் மருத்துவமனைகளில்; அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுபோல ஒரு போதும் நேர்ந்தது இல்லை. மூக்கு உடைந்திருக்கிறது. விரல் உடைந்திருக்கிறது. விலா எலும்பு உடைந்திருக்கிறது. ஆனாலும் இப்போது போல நான் மரணத்தை பற்றி எண்ணுகிற நிலைக்கு சென்றதே இல்லை.
நான் அதில் இருந்து மீண்டிருக்கிறேன் என்றால் அதற்காக எனக்கு அளித்த அற்புதமான சிகிச்சைதான் காரணம். இந்த உயிர்க்கொல்லி நோயில் இருந்து மீண்டு வந்தது அதிசயம்தான். இன்னும் எத்தனையோ பேர் போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?
நான் இன்று முற்றிலுமாக குணமடைந்து திரும்பி இருக்கிறேன் நம் நாட்டையும் முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என்ற விருப்ப உணர்வால் நான் இயக்கப்படுகிறேன்.நாட்டை முன்னோக்கி வழிநடத்திச்செல்வோம் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சில தினங்களுக்கு முன்னதாக, அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்சுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு போரிஸ் ஜோன்சனை மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய இரு மருத்துவர்களின் பெயர்களை இணைத்து வில்பிரட் லாரீ நிக்கோலஸ் ஜோன்சன் என பெயர் சூட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #மரணத்தை #மருத்துவர்கள் #போரிஸ்ஜோன்சன்