சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மின்மோட்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டர்களும் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் அரசடி பகுதியைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுடைய வயதுடைய நபர்களே கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட பொருள்களை கல்வியங்காடு மற்றும் கட்டப்பிராய் பகுதிகளில்கொண்டு சென்று சந்தேக நபர்கள் விற்பனை செய்தமை கண்டறிப்பட்டது. அதனடிப்படையில் அங்கிருந்து திருட்டுப் பொருள்கள் காவற்துறையினரால் மீட்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மூவரையும், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. #மின்மோட்டார் #கைது #யாழ்ப்பாணம்