இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்ரைக 9 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளதுடன் 197 பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #இலங்கை #கொரோனா #உயிரிழப்பு