ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
விசாகப்பட்டின ஆலையில் விசவாயு கசிவு – 8பேர் பலி -200 பேர் மருத்துவமனையில்
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால்பட்டினத்தில் எல்ஜி பொலிமர் ஆலையில் இருந்து இன்று (7)அதிகாலை ஏற்பட்ட விச வாயு கசிவினால் அப்பகுதி முழுவதிலும் வாழும் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
ரசாயன ஆலையில் இருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் இறந்ததாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண்களில் எரியும் உணர்வும் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக இன்று அதிகாலை தூக்கத்தில் இருந்தபோதே உணர ஆரம்பித்ததனையடுத்து இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1961 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் பொலிமர்ஸ் என அமைக்கப்பட்ட இந்நிறுவனம் தென் கொரியாவின் எல்ஜி செம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு 1997 ஆம் ஆண்டில் எல்ஜி பொலிமர்ஸ் இந்தியா என மறுபெயரிடப்பட்டது.
பொலிஸ்டிரீன் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்ற இந்த ஆலை பொம்மைகள் மற்றும் பலவகையான நுகர்வோர் பொருட்களை தயாரிக்கப் பயன்படும் பல்துறை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கின்றது. சுமார் ஒரு தொன் எடையுள்ள விசவாயு கசிந்திருப்பதாகவும் இதனால் அந்த ஆலையைச் சுற்றியுள்ள பத்து கிலோ மீற்றர் சுற்றளவுக்கு பாதிப்பு இருக்கும் எனவும் ஆந்திர ஊடகங்கள் தெரிவிக்கின்றன. #ஆந்திரா #விசாகப்பட்டினம் #விசவாயு