205
யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை. என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பொசிட்டீவ் என அறிக்கை வந்துள்ளது எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புறோம். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் அவர்கள் ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தியுள்ளோம்.
மீண்டும் ஐந்து நாட்கள் 14 நாட்களின் பின்னர் அவர்களுக்கு பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவே இதுதொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கொவித்19 தொற்றுக்குள்ளானவர்களிற்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நேற்றையதினம் தொற்று இனங்காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. ஆனாலும் சுகாதார விதிகளை பின்பற்றி ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தம்மை நோயில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயினை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும் எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்வதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார் #யாழில் #கொரோனோ #சத்தியமூர்த்தி
Spread the love