160
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள் இன்று (16) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 455 இலக்க விமானத்தின் மூலம் அவர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் கிருமி தொற்று நீக்கத்திற்கும், கொவிட் 19 பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். #ஜப்பான் #இலங்கையர்கள் #கொரோனா
Spread the love