192
யாழ்.நவாலி பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் தாலிக் கொடியை அறுத்த திருடன் சில மணிநேரங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து கொள்ளையர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக்கொடியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
அந்த முச்சக்கர வண்டியின் சாரதி வாகனத்திலேயே தயாராகவிருந்த நிலையில் திருடன் மட்டும் இறங்கி வந்து தாலிக்கொடியை அறுத்துச் சென்றார் என்று பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணால் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டில் முச்சக்கர வண்டியின் இலக்கமும் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் காவல்துறையினர், முச்சக்கர வண்டியின் இலக்கைத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளரைக் கைது செய்தனர். அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாலிக் கொடியை அறுத்தவரை இரவு11 மணியளவில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. #நவாலி #தாலிக்கொடி #திருடன் #கைது
Spread the love