179
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இரண்டாவது நாளாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை ஆகியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பொஜனபெரமுன ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு வரும் சிலையில் முன்னாள் அமைச்சர்கள், தொடர்ச்சியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களங்களுக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love