இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்குப் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதனையடுத்து , நாடு முழுவதும் பாதிப்பு 1 லட்சத்தைத் கடந்துள்ளது
மத்திய சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் நேற்று திங்கட்கிழமை 5,242 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு 96,169 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,970 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா 35,058, தமிழகம் 11,760, குஜராத் 11,745, டெல்லி 10,054, ராஜஸ்தான் 5,507, மத்தியப் பிரதேசம் 5,236, உத்தரப் பிரதேசம் 4,605 ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. அதுபோன்று 3,163 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,173ஆக உள்ளது.
அதேவேளை கர்நாடகா எல்லைக்குள் கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மே 31 வரை வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நேற்று அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. #இந்தியா #கொரோனா #கர்நாடகா #தடை