194
கொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் வேளையில் தனியார் ஒருவரால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். #மாளிகாவத்தை #நெரிசல் #பெண்கள் #உயிரிழப்பு #நிவாரணம்
Spread the love